இருவருக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாட்டில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

27 0

ரம்புக்கனை, கப்பல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மது அருந்திக்கொண்டிருந்த இருவருக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாட்டில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக ரம்புக்கனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த கொலை சம்பவம் நேற்று வியாழக்கிழமை (03) மாலை இடம்பெற்றுள்ளது.

கொடவெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடைய நபரொருவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

ரம்புக்கனை, கப்பல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இரு நபர்கள் இணைந்து மது அருந்திக்கொண்டிருந்துள்ளனர்.

இதன்போது, இருவருக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு எல்லை மீறியதில் சந்தேக நபர் கொலை செய்யப்பட்ட நபரை கூரிய ஆயுதத்தால் தாக்கி காயப்படுத்தியுள்ளார்.

பின்னர், காயமடைந்தவர் தலம்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து, கொடவெல்ல  பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைய சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ரம்புக்கனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.