வரக்காபொல அல்கம பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் தம்பதி ஒன்று நேற்று வியாழக்கிழமை (03) கைது செய்யப்பட்டுள்ளதாக வரக்காபொல பொலிஸார் தெரிவித்தனர்.
அல்கம பிரதேசத்தில் வசிக்கும் 59 வயதுடைய மனைவியும் 40 வயதுடைய கணவருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
வரக்காபொல அல்கம பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் சட்டவிரோத மதுபானம் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக வரக்காபொல பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து, பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் குறித்த வீட்டிற்குள் மிகவும் சூட்சுமமான முறையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த உள்நாட்டு துப்பாக்கி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.
இதனையடுத்து, சந்தேக நபர்களான தம்பதி வரக்காபொல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.