வவுனியா பிரதேச செலகத்தின் புதிய பிரதேச செயலாளராக வவுனியா நெடுங்கேணி பிரதேச செயலாளராக கடமையாற்றிய இ.பிரதாபன் நியமிக்கப்பட்டுள்ளார்.
வவுனியா பிரதேச செயலகத்தில் காணப்பட்ட பிரதேச செயலாளர் பதவி வெற்றிடத்தினை நிவர்த்தி செய்யும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளார்
வவுனியா பிரதேச செயலகத்தின் புதிய பிரதேச செயலாளாரான இ. பிரதாபன் நேற்று (02.10.2024) காலை 10.00 மணியளவில் தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் பழைய மாணவரான பிரதாபன் முல்லைத்தீவில் உதவி பிரதேச செயலாளராகவும், புதுக்குடியிருப்பில் பிரதேச செயலாளராகவும், வவுனியா வடக்கு பிரதேச செயலாளராகவும், கடமையாற்றிய நிலையில் தற்போது வவுனியா பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கடமையினை பொறுப்பேற்கும் வைபவத்தில் வவுனியா அரசாங்க அதிபர் பி.எ. சரத்சந்திர, வவுனியா உதவி தேர்தல் ஆணையாளர், பிரதேச செயலக ஊழியர்கள், கிராம சேவையாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இ.பிரதாபன் முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் ஆர்.இந்திரராசாவின் புதல்வர் என்பதும் குறிப்பிடத்தக்கது.