யாழில் வெளிநாட்டுப் பிரஜையின் பணம் கொள்ளை: இருவர் கைது!

29 0

வெளிநாட்டு பிரஜையொருவரின் 1 கோடியே 3 லட்சம் ரூபாய் பணம், ஐ ஃபோன் 14 தொலைபேசி  மற்றும் கடவுச்சீட்டு என்பனவற்றைக் கொள்ளையிட்டுச் சென்ற  குற்றச்சாட்டில் இருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த நபர்களே இவ்வாறு கொள்ளை இட்டுச் சென்றுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வெளிநாட்டுப் பிரஜை சேந்தாங்குளம் பகுதியில் உள்ள தனக்குச் சொந்தமான  காணியை விற்றுவிட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த வேளை, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் குறித்த நபரிடமிருந்து கொள்ளை இட்டுச் சென்றுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றில் ஆஜர் படுத்த நடிவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இது குறித்த மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.