ஜனாதிபதி அநுர ஏன் ராஜபக்ச குடும்பத்தினர் தொடர்பான ஊழல் ஆவணங்களை வெளியிடவில்லை?

31 0

”ராஜபக்ச குடும்பத்தினர் திருடர்கள் என கூறி ஆட்சியை கைப்பற்றியுள்ள புதிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஏன் ஊழல் தொடர்பான ஆவணங்களை இதுவரை வெளியிடவில்லை?” என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே சரத் வீரசேகர இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” எமது நாட்டுக்கு புதிய ஜனாதிபதி ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். நாட்டை அபிவிருத்தி செய்யவும் மக்கள் சார்பான கட்சி என்ற வகையில் எம்மால் அவருக்கான ஆதரவு வழங்கப்படும்.

இன்று திருடர்களை பிடிப்பதற்காக ஒரு ஜனாதிபதி நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார அக்கிரமக்காரர்கள் பற்றிய பல கோப்புகள் இருப்பதாக கூறியிருந்தார். இன்னும் அவற்றை ஏன் அவர் வெளிப்படுத்தவில்லை.
2015ல் நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபோது ராஜபக்ச திருடர்கள் கூண்டில் ஏற்றப்போகிறோம் என கூறியே வந்தனர்.

ஆனால் இது வரை எந்த திருடனும் பிடிபடவில்லை. நாட்டு மக்களின் நன்மையை கருத்தில் கொண்டே நாம் இந்த உள்நாட்டுப் போரை நிறைவிற்கு கொண்டுவந்தோம்.
கடைசி மணி நேரம் வரை.  எமக்கு மேற்கத்திய நாடுகளின் தாக்கம் அதிகமாக இருந்தது. ஆனால் நாங்கள் மேற்கத்திய நாடுகளை புறக்கணித்து
நாட்டு மக்களுக்காக யுத்ததை முடிவுக்கு கொண்டு வந்தோம்.

அதன் பின்னர் ஜெனிவாவில் போர்க்குற்றம் இழைத்தோம் என குற்றம் சுமத்தினார்கள்.எமது தேசிய உணர்வை அழிக்கவே இவர்கள் முனைகின்றனர்” இவ்வாறு  சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.