கொழும்பில் 1,400 வெளிநாட்டு சிகரட்டுகளுடன் ஒருவர் கைது

31 0

கொழும்பு துறைமுக நகரத்திற்கு அருகில் உள்ள பிரதேசத்தில் வெளிநாட்டு சிகரட்டுகளுடன் சந்தேக நபரொருவர் மத்திய கொழும்பு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் நேற்று (02) கைது செய்யப்பட்டுள்ளார்.

மத்திய கொழும்பு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாத்தளை, பல்லேயாய பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 1,400 வெளிநாட்டு சிகரட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதனையடுத்து,சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காகக் கொழும்பு துறைமுக பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.