டென்மார்க்கில் தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் 37ஆவது ஆண்டு நினைவேந்தல்.

63 0

டென்மார்கில் கோர்சன்ஸ் மற்றும் கொல்பேக் நகரங்களில் எழுச்சியுடன் தியாக தீபம் திலீபன் அவர்களின் 37 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. இந் நிகழ்வில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டதை தொடர்ந்து தியாக தீபம் திலீபன் மற்றும் கேணல் சங்கர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு ஈகைச் சுடறேற்றி மலர்வணக்கம் செலுத்தியதோடு அனைத்து மாவீரர்களையும் படுகொலை செய்யப்பட்ட மக்கள் மற்றும் நாட்டுப்பற்றாளர்களையும் நினைவேந்தி அகவணக்கம் செலுத்தப்பட்டது. தொடர்ந்து கோர்சன்ஸில் நடைபெற்ற தியாக தீபம் திலீபன் அவர்களின் வணக்க நிகழ்வில் கோசன்ஸ் நகர மாலதி தமிழ்க் கலைக்கூட மாணவர்களின் பாட்டுகள், கவிதைகள், மற்றும் பேச்சுக்கள் இடம் பெற்றன.

இவ்வருடமும் டென்மார்க் மாலதி தமிழ்க் கலைக்கூடங்களில் தியாக தீபம் திலீபன் அவர்களின் 37ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப் பட்டதுடன், எமது அடுத்த தலைமுறையினருக்கு தியாக தீபத்தின் தியாகத்தை எடுத்துக் கூறப்பட்டது.