களுத்துறை, பண்டாரகமை, குங்கமுவ பிரதேசத்தில் அசிட் தாக்குதலுக்கு இலக்காகி மூன்று பேர் காயமடைந்துள்ளதாக பண்டாரகமை பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
மது போதையிலிருந்த நபரொருவர் வீடொன்றிற்கு முன்பாக நின்றுகொண்டு கூச்சலிட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இதன்போது, அவ்வழியாக சென்ற மாமனாரும் மருமகனும் மது போதையிலிருந்த நபரிடம் அமைதியாக இருக்குமாறு கூறியுள்ளனர்.
பின்னர், மது போதையிலிருந்த நபர் குறித்த வீட்டிற்குள் சென்று அசிட் நிறைந்த போத்தல் ஒன்றை வெளியே எடுத்து வந்து மாமனார் மற்றும் மருமகன் மீது வீசியுள்ளார்.
இதன்போது, வீதியில் பயணித்த மற்றுமொரு நபரும் அசிட் தாக்குதலுக்குள்ளாகியுள்ளார்.
இதனையடுத்து, காயமடைந்த மூவரும் சிகிச்சைக்காக ஹொரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சந்தேக நபரை கைது செய்வது தொடர்பில் பண்டாரகமை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.