பெய்ரூட்டின் மத்திய பகுதியில் உள்ள மருத்துவநிலையம் மீது இஸ்ரேல் தாக்குதல் – ஐவர் பலி

38 0
image

லெபனான் தலைநகரின் மத்திய பகுதியில் உள்ள மருத்துவ நிலையமொன்றின் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் ஐவர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஹெஸ்புல்லா அமைப்புடன் தொடர்புடைய இஸ்லாமிய சுகாதார அமைப்பிற்கு சொந்தமான மருத்துவ நிலையத்தின் மீதே இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

மத்திய பெய்ரூட் மீது இந்த வாரம் இஸ்ரேல் மேற்கொண்ட இரண்டாவது தாக்குதல் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.இஸ்ரேல் அதிகளவிற்கு பெய்ரூட்டின் தென்பகுதி புறநகர் பகுதிகளை இலக்குவைத்தே தாக்குதல்களை மேற்கொண்டுவந்துள்ளது.

ஏவுகணை செல்லும் சத்தத்தையும் பின்னர் அது விழுந்து வெடிக்கும் சத்தத்தையும் கேட்டதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

கட்டிடமொன்று தீப்பிடித்து எரிவதையும் மக்கள்தப்பியோடுவதையும் காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன. இஸ்ரேலின் தாக்குதல் காரணமாக கடந்த இரண்டு வாரங்களில் பல துணைமருத்துவபணியாளாகள் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த வாரம் 14 துணை மருத்துவ பணியாளர்கள் கொல்லப்பட்டனர்,திங்கட்கிழமை பெக்காவில் ஆறு பேர் கொல்லப்பட்டனர் இவர்கள் அனைவரும் இஸ்லாமிய சுகாதார அமைப்பை சேர்ந்தவர்கள் .