ஹபரனையில் 27 வயது இளைஞன் தவறான முடிவெடுத்து உயிர் மாய்ப்பு !

22 0

ஹபரனை பிரதேசத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை (01) இரவு இளைஞன் ஒருவன் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக ஹபரனை பொலிஸார் தெரிவித்தனர்.

ஹபரனை பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞனொருவனே உயிரிழந்துள்ளார்.

இந்த இளைஞன் தனது வீட்டிற்கு அருகில் உள்ள தனது கடையில் வைத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த இளைஞன் சுகயீனம் காரணமாக நீண்ட காலமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹபரனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.