வவுனியா – ஈச்சங்குளத்தில் காட்டு யானைகளினால் பெருந்தொகையான தென்னை மரங்கள் முற்றாக அழிப்பு

29 0

வவுனியா ஈச்சங்குளத்தில் காட்டு யானைகளினால் ஒரே இரவில் பெருந்தொகையான தென்னை மரங்கள் முற்றாக  அழிக்கப்பட்டுள்ளன.

குறித்த அனர்த்தமானது நேற்று புதன்கிழமை (02)  இரவு இடம்பெற்றுள்ளது.

நீர்தட்டுப்பாட்டு காலத்திலும் கஸ்டப்பட்டு  தென்னையினை பயிருட்டு வளர்ந்திருந்த நிலையிலே யானைகளினால் இவ்வாறு அழிக்கப்பட்டுள்ளதுடன், தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வரவிருக்கும் பெரும் போக விவசாயத்தினை யானையின் தாக்கத்திற்கு மத்தியில் எவ்வாறு செய்யவது என்று விவசாயிகள்  தெரிவித்தனர்.

எனவே இதற்கான சரியான தீர்வினை தமக்கு பெற்றுத்தருமாறு விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.