இலங்கையில் ஊழல் கலாச்சாரம் நீடித்தால் ஜப்பானின் முதலீடுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் இல்லைஎன இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹடேகி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையி;ல் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது.
முதலில் வெளிநாட்டு அழுத்தங்களின் மூலம் கிடைக்ககூடிய சாதகதன்மையை பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.
சர்வதேச சமூகத்தின் அழுத்தங்கள் இல்லாமல் ஜப்பான் பல விடயங்களை சாதித்திருக்க முடியாது.
ஜப்பானின் சீர்திருத்த தலைவர்கள் சர்வதேச அழுத்தத்தின் காரணமாக புத்திசாலித்தனமான முடிவுகளை எடுத்தார்கள்.
இலங்கை இன்று சர்வதேச நாணயநிதியத்துடனான உடன்படிக்கையின் கீழ் பொருளாதார அமைப்பு முறையில் சீர்திருத்தங்களை மேற்கொள்ளமுயல்கின்றது.வரிச்சீர்திருத்தம், மின்சார சீர்திருத்தம்,போன்றவை சவாலானவை மக்களின் ஆதரவற்றவையாக காணப்படலாம்.
எனினும் இவ்வாறான வெளிநாட்டு அழுத்தங்களை நாட்டின் சிறந்த எதிர்காலத்திற்காக பயன்படுத்துவதை பலவீனமாக கருதக்கூடாது,மாறாக தலைவர்களின் புத்திசாலித்தனத்திற்கான சான்றாக கருதவேண்டும்.
இந்தியா 1991 இல் நிதிநெருக்கடியை எதிர்கொண்டது,சர்வதேச நாணயநிதியம் உலக வங்கியின் ஆலோசனைகளுடன் கட்டமைப்பு சீர்திருத்தத்தை முன்னெடுத்தது.
அன்று முன்னெடுக்கப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்கள் இந்தியாவை இன்று மிகவேகமாக வளர்;ச்சியடையும் பொருளாதாரமாக மாற்றியுள்ளது.
சர்வதேச நாணயநிதியத்துடனான உடன்படிக்கைகள் புத்திசாலித்தனமான தொடர்ச்சியான பொருளாதாரகொள்கைகளை பின்பற்றுவது குறித்த இலங்கையின் அர்ப்பணிப்பிற்கான ஆதரவாக சர்வதேச சமூகம் கருதுகின்றது.
2022 இல் இலங்கை வங்குரோத்து நிலையை அடைந்ததை தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்ட 11 ஜப்பான் நாணய கடன் திட்டங்களை ஜப்பான் சமீபத்தில் மீண்டும் ஆரம்பித்துள்ளது.
உலகின் வேறு எந்த நாட்டிற்கும் முதல் ஜப்பான் இதனை செய்துள்ளது.
சர்வதேச நாணயநிதியத்துடனும் இலங்கைக்கு கடன்வழங்கிய ஏனைய நாடுகளுடனும் இலங்கை செய்துகொண்ட உத்தியோகபூர்வ உடன்படிக்கையின் அடிப்படையிலேயே ஜப்பான் இந்த திட்டங்களை மீள ஆரம்பித்துள்ளது என்பதை கருத்தில்கொள்வது அவசியம்.
போட்டிதன்மை மிக்க தொழில்துறையை உருவாக்குதல்
ஜப்பானின் அனுபவத்தில் இரண்டாவது மிக முக்கியமான விடயம் என நான் கருதுவது போட்டித்தன்மை மிக்க தொழில்துறையை கட்டியெழுப்புவது.
இலங்கை தற்போது முக்கியமான திருப்புமுனையில் உள்ளது.
பொருளாதார நெருக்கடியை வளர்;ச்சியை நோக்கி மாறுவதற்கான வாய்ப்பாக பயன்படுத்தலாம்.
போட்டித்தன்மை மிக்க தொழில்துறையை உருவாக்குவதற்கான தொழில்கொள்கையை உருவாக்குவது அவசியம் என்பதை பொருளாதார அதிசயம் குறித்த ஜப்பானின் அனுபவம் வெளிப்படுத்துகின்றது.
சர்வதேச நாணயநிதியத்தின் திட்டத்தின் கீழ் இலங்கையின் பொருளாதாரம் ஸ்திரமடைந்துள்ளது.பணவீக்கம் ஒன்றை இலக்கத்திற்குள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது,கடந்த வருடத்தின் நான்காவது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி சாதகமானதாக காணப்பட்டது.
குறுகிய காலத்திற்குள் பொருளாதார ஸ்திரதன்மையை ஏற்படுத்துவதற்கு அரசாங்கமும் பொதுமக்களும் மேற்கொண்ட முயற்சிகளை நான் பாராட்டுகின்றேன்.
எனினும் இலங்கைஇறக்குமதி கட்டுப்பாட்டினை அகற்றியதும்,அந்நிய செலாவணி பற்றாக்குறை மீண்டும் உருவாகலாம்.
இதன் காரணமாக ஸ்திரதன்மையை ஏற்படுத்திய பின்னர் ,நாட்டில் நிலையான அபிவிருத்தியை ஏற்படுத்தும்,நாட்டிற்கு அந்நிய செலாவணியை உழைக்கும் போட்டித்தன்மை மிக்க தொழில்துறையை கட்டியெழுப்புவது அவசியம்.
தொழில்துறையை கட்டியெழுப்புவதில் இலங்கை ஜப்பானின் தொழில்துறை கொள்கைகள் மூலம் பாடம் கற்றுக்கொள்ளலாம்.
நஷ்டத்தில் இயங்கும் தொழில்துறையை அரசாங்க பணத்தை பயன்படுத்தி பாதுகாக்காமல் இருப்பது அவசியம்.
3
ஊழலிற்கு முடிவுகட்டுதல்
நான் சுட்டிக்காட்ட விரும்புகின்ற மூன்றாவது விடயம் ஊழலிற்கு முடிவு காண்பது.
இலங்கைக்கு மிகவும் அவசியமானது என்பதால் நான் ஊழல் பிரச்சினை குறித்து கருத்து தெரிவிக்க விரும்புகின்றேன்.
ஊழலை ஒழிப்பது குறித்து தீவிர அர்ப்பணிப்புள்ள தலைவரை இலங்கை மக்கள் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்துள்ளதால் இலங்கைக்கு நீண்டகாலமாக பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வந்துள்ள இந்த தீமைக்கு தீர்வை காண்பதற்கான சிறந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.
நான் இங்கு பணியாற்ற வந்த பின்னர் இலங்கையின் அரசியலை உன்னி;ப்பாக அவதானித்தவன் என்ற அடிப்படையில் ஊழல் தொடர்பான இரண்டு விடயங்களை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
இலங்கை மக்கள் தங்கள் தலைவர்களை வெறுப்பதற்கு ஊழல் ஒரு காரணமாக உள்ளது.மேலும் தலைவர்கள் ஊழல்மிகுந்தவர்களாகயிருக்கும் போது பொறுப்புணர்வுள்ளவர்களாக தாங்கள் இருக்கவேண்டும் என மக்கள் சிந்திக்கும் நிலையை அது ஏற்படுத்தாது.தலைவர்கள் ஊழல்வாதிகளாக காணப்படும் போது வரி செலுத்தவேண்டியவர்கள் வரிசெலுத்துவதை தவிர்க்க முயலக்கூடும்.
இரண்டாவது இலங்கை வெளிநாட்டு முதலீடுகளை பெற்றுக்கொள்ள முயலும் போது இது பாதகமான விதத்தில் தாக்கம்; செலுத்தும்.
வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பெறுவதற்கு வெளிப்படையான எதிர்வுகூறக்கூடிய வர்த்தக சூழல் அவசியம்.
ஜப்பானிய நிறுவனங்கள் தற்போது தங்கள் கடப்பாடுகளை பின்பற்றுவதில் மிகவும் இறுக்கமாக காணப்படுகின்றன,இதன் காரணமாக அவர்கள் இலஞ்சம் பெறுவதில்லை.
இலங்கையில் ஊழல் கலாச்சாரம் நீடித்தால் ஜப்பானின் முதலீடுகள் வருவதற்கான வாய்ப்புகள் இல்லை என்றே தெரிவிப்பேன்.
இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கா அதிகளவு ஜப்பானிய முதலீடு கிடைப்பதை விரும்புவதால் நான் இதனை தெரிவிக்கின்றேன்.