பாராளுமன்றத் தேர்தல் முடிவடைந்த பின்னர் விரைவில் உள்ளூராட்சிமன்றத் தேர்தல்

26 0

பாராளுமன்றத் தேர்தல்  முடிவடைந்ததன் பின்னர் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் உத்தியோகபூர்வமான தீர்மானத்தை அறிவிப்போம் என  தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தேர்தல்களை நடத்துவதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடு சட்ட நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடல்களை அடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை சுமூகமாக நடத்துவதை உறுதி செய்வதற்காக முக்கியஸ்தர்களுடன் ஆரம்பக் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

“நாங்கள் தேவையான அடிப்படை பணிகளை நிறைவு செய்துவிட்டோம், பொதுத் தேர்தலுக்குப் பின்னர் உடனடியாக உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவோம்” என ஆணைக்குழு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.