கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் வாள், மன்னா கத்தியுடன் கைது

23 0

வெல்லம்பிட்டி வேரகொட களனிதிஸ்ஸகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இரண்டு கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் வாள் மற்றும் மன்னா கத்தியுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரின் வீட்டில் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு வாள்களும் மன்னா கத்தியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற இரண்டு கொலைச் சம்பவங்கள் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான “கசுன்“ என்பவருடன் நெருங்கிய தொடர்புகளை பேணி வந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் மேலும் தெரியவந்துள்ளது.