ரஞ்சன்ராமநயக்கவின் பறிக்கப்பட்ட குடியுரிமையை உடனடியாக மீண்டும் வழங்குவதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உரிய ஆவணங்களுடன் நேற்று ஜனாதிபதி அலுவலகத்திற்கு சென்றிருந்தார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சில ஆவணங்களுடன் வருமாறு கேட்டிருந்தார்கள்,என தெரிவித்துள்ள ரஞ்சன்ராமநாயக்க நான் தேசிய மக்கள் சக்தியின் தலைவர்களை அணுகி குடியுரிமையை மீண்டும் வழங்குமாறு கேட்டிருந்தேன்,ஜனாதிபதியை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டேன் என தெரிவித்துள்ளார்.
தேர்தலில் போட்டியிடுவதற்கு எனக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. வாக்களிக்கும் உரிமையையும் நான் இழந்தேன்,எனினும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கான வாக்காளர் அட்டை எனக்கு கிடைத்தது நான் வெளிநாட்டில் இருந்ததால் வாக்களிக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
குடியுரிமையை மீளவழங்கினால் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு தற்போதைக்கு அது குறித்து பதிலளிக்க முடியாது என ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.