அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையிலிருந்து தப்பிச் சென்ற கைதிகளில் இருவர் நேற்று (02) மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக தங்காலை பொலிஸார் தெரிவித்தனர்.
அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நான்கு கைதிகள் கடந்த செவ்வாய்க்கிழமை 01 ஆம் திகதி அன்று சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பிலிருந்து தப்பிச் சென்றிருந்தனர்.
இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், தப்பிச் சென்ற கைதிகளில் இருவர் மாவெல்ல மீன்பிடித் துறைமுகத்திற்கு அருகில் வைத்து நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அம்பலாந்தோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த இரு கைதிகளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களை அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் ஒப்படைக்க தங்காலை பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.