வலிகாமம் வடக்கில் மதுபானசாலை அமைப்பதை தடுத்து நிறுத்து நிறுத்துங்கள் !

33 0

ஊரணி, தையிட்டி, மயிலிட்டி ஆகிய கிராமங்கள் உள்ளடங்கிய பகுதியில் புதிதாக மதுபானசாலை அமைப்பதை தடுத்து நிறுத்துமாறு ஜனாதிபதிக்கு வலிவடக்கு ஊறணி,தையிட்டி, மயிலிட்டியைச் சேர்ந்த மக்கள் கையேழுத்திட்டு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்கள்.

அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

மதுபானசாலை அமைப்பதனை தடுத்து நிறுத்தல் தொடர்பாக ஊரணி, தையிட்டி, மயிலிட்டி ஆகிய கிராமங்கள் உள்ளடங்கிய பகுதியில் புதிதாக மதுபானசாலை அமைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இம் மதுபானசாலை எமது கிராமத்தில் அமையப்பெறுவதனை கிராம மக்களாகிய நாம் பின்வரும் காரணங்களினால் எமது எதிர்ப்பினை வெளிப்படுத்தி நிற்கின்றோம்.

கடந்த 1990 ஆம் ஆண்டு இடப்பெயர்வின் பின்னர் நாம் பல கஷ்டங்களை எதிர்கொண்டு 30 வருட போரும் 15 வருட போரின் பின்னரான அவலங்களும் எம்மை அழித்து தற்போது பல வருடங்களின் பின்னர் எமது சொந்த இடங்களிற்கு திரும்பி வீடுகள் அமைத்து அனைத்து அபிவிருத்திகளையும் புதிதாக மேற்கொண்டு மகிழ்வாக வாழ்ந்து வரும் எமக்கு மீண்டும் ஒரு அழிவை நாம் சந்திக்க அனுமதியோம் எமது பிள்ளைகளை கல்வியில் முன்னேற்றி எதிர்கால இளைஞர் சமுதாயத்தை வளம் மிக்கவர்களாக கட்டியெழுப்புவதற்கு பெரிதும் துன்பப்பட்டு வருகின்றோம்.

வளர்ந்து வரும் இச்சமுதாயத்தில் தற்பொழுது போதைப்பொருள் பாவனையில் பல குடும்பங்களில் இளைஞர் யுவதிகள் பல்வேறுபட்ட பிரச்சினைகளை எதிர்கொண்டு வருங்கால சமூகம் சீரழிந்து வருவதனை காணக்கூடியதாக இருக்கின்றது.

இவ்வாறான சூழ்நிலையில் எமது கிராமத்தில் இவ்வாறான துஸ்பிரயோகங்கள் தோன்றாது இருக்க வேண்டும் என்பதில் நாம் பெரிதும் அக்கறையாக உள்ளோம். பெண் தலைமைத்துவ குடும்பங்கள் இளம் பெண் பிள்ளைகள் கடற்தொழில் மேற்கொள்ளும் குடும்பங்களை சார்ந்தவர்கள் பாதிக்கபடகூடிய நிலையும் குடும்ப வன்முறைகள் கலாசார சீரழிவுகள் ஏற்படகூடிய சூழல் உருவாகுகிறது.

இதனால் இம்மதுபானசாலையினை எமது பிரதேசத்தில் அமைப்பதனை தடுத்து நிறுத்தியுதவுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம் மேற்படி எமது சமூகத்தின் நன்மை கருதியும் கீழ்க்குறிப்பிடப்படும் ஏனைய காரணங்களினாலும் இவ் மதுபானசாலை இவ்விடத்தில் நிறுவுவதனை தடைசெய்வதற்கு ஏற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுதவுமாறு மீண்டும் தயவுடன் வேண்டி நிற்கின்றோம்.

மதுபானசாலைக்கு மிக அண்மையில் புனித ஊறணி அந்தோணியார் ஆலயம் அமைந்துள்ளது.மதுபானசாலைக்கு மிக அண்மையில் பாடசாலைகள் அமைந்திருத்தல்,மதுபானசாலைக்கு மிகவும் அண்மையில் காங்கேசன்துறை மகாவித்தியாலயம் அமைந்துள்ளதும் மீளக்குடியமராத பிரதேசம், மீளகுடியேற்றம் முழுமையாக நிறைவு பெறாமையினால் அபிவிருத்தி பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பிரதேசமாகவுள்ளது.

இதன் பிரதிகள் வடக்கு மாகாண ஆளுநர், யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் நீதிபதி நீதவான நீதிமன்றம் மல்லாகம், பிரதேச செயலாளர் வலிகாமம் வடக்கு தெல்லிப்பளை  செயலாளர், பிரதேச சபை வலிகாமம் தெல்லிப்பளை, சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காங்குசன்துறை, மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.