விவாகரத்து வழக்கில் டிவிஸ்ட்.. மனைவியை நீதிமன்றத்தில் இருந்து துண்டுக்கட்டாக தூக்கி ஓடிய கணவன்

157 0

திருமணங்களின் எண்ணிக்கையை விட விவகாரத்துக்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டிருக்கும் இன்றைய சூழலில் சீனாவில் நடந்த சம்பவம் ஒன்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. சீனாவை சேர்ந்த சென் [Chen], மற்றும் லீ [Li] ஆகிய இருவர் 20 வருடங்களாக கணவன் மனைவியாக ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் தனது கணவர் தன்னுடன் அடிக்கடி சண்டைபோடுகிறார் என கூறி லீ சமீபத்தில் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

ஆனால் கணவர் சென் மனைவியை பிரிய துளியும் விருப்பம் இல்லாமல் இருந்துள்ளார். இருவருக்கும் இடையில் ஏற்பட்டது சிறிய பிரச்சனைதான் என்றும் அவர்கள் மீண்டும் இணைந்து வாழ வேண்டும் என்றும் அறிவுரை கூறி நீதிமன்றம் அந்த வழக்கை ரத்து செய்தது. ஆனால் தனக்கு கட்டாயம் விவாகரத்து வேண்டும் என்று மனைவி லீ மீண்டும் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

இதுதொடர்பான விசாரணைக்கு கணவன் மனைவி ஆகிய இருவரும் நீதிமன்றத்துக்கு வந்த நிலையில், விசாரணையை நடக்கவிடாமல் செய்ய தனது மனைவி கணவர் துண்டுக்கட்டாக தூக்கிக்கொண்டு நீதிமன்ற கட்டடத்தை விட்டு வெளியே ஓட முயற்சித்துள்ளார்.மனைவியை கையில் ஏந்திக்கொண்டு சத்தமாக கூச்சலிட்டபடி சென் நீதிமன்றத்தை விட்டு ஓட முயற்சித்ததை பார்த்த அதிகாரிகள் அவரை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

கணவனின் காதலை பார்த்து வியந்த நீதிபதி, இனிமேல் மனைவியிடம் சண்டை போட மாட்டேன் என்று மன்னிப்பு கடிதம் எழுதிக்கொடுக்க உத்தரவிட்டுள்ளனர். அதனபடி, ‘எனது தவறின் விளைவுகளை நான் புரிந்துகொண்டேன். இனி இந்த தவறை ஒருபோதும் செய்யமாட்டேன்’ என்று கணவர் சென் எழுதிக்கொடுத்துள்ளார்