2020 ஆகஸ்ட் 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு, 2024.செப்டெம்பர் 24 ஆம் திகதி நள்ளிரவுடன் கலைக்கப்பட்ட ஒன்பதாவது பாராளுமன்றத்தின் காலப்பகுதியில் 167 சட்டங்கள் இயற்றப்பட்டன.
2020 ஆம் ஆண்டு 07அரசாங்க சட்டங்களும், 2021 ஆம் ஆண்டு 30 அரசாங்க சட்டங்களும், 2022 ஆம் ஆண்டு 44 அரசாங்க சட்டங்களும் 2 தனியாள் உறுப்பினர் சட்டங்களும், 2023 ஆம் ஆண்டு 29 அரசாங்க சட்டங்களும், 05 தனியாள் உறுப்பினர் சட்டங்களும், 2024 ஆம் ஆண்டு 36 அரசாங்க சட்டங்களும், 21 தனியாள் சட்டங்களும் இக்காலப்பகுதியில் இயற்றிக் கொள்ளப்பட்டுள்ளன.
இதற்கமைய 2023 ஆம் ஆண்டின் 03 ஆம் இலக்க தேர்தல் செலவினத்தை ஒழுங்குப்படுத்தல் சட்டம், 2023 ஆம் ஆண்டின் 06 ஆம் இலக்க பாராளுமன்ற வரவு செலவுத் திட்ட அலுவலக சட்டம், 2023 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டம், 2023 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கி சட்டம், 2023 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள் ) சட்டம்,
2023 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்பு ( திருத்தம் ) சட்டம், 2024 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க நிகழ்நிலைக் காப்புச் சட்டம், 2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க இலங்கை மின்சார சட்டம், 2024ஆம் ஆண்டின் 44 ஆம் இலக்க பகிரங்க நிதிசார் முகாமைத்துவ சட்டம், 2024 ஆம் ஆண்டின் 45 ஆம் இலக்க பொருளாதார நிலைமாற்றம் சட்டம் உள்ளிட்டவை 9 ஆவது பாராளுமன்றத்தில் இயற்றப்பட்ட குறிப்பிடத்தக்க சட்டங்களாகும்.