திருகோணமலையில் தேசிய வாசிப்பு மாத நிகழ்வும் சிறுவர் தினமும் ஆரம்பம்..!

32 0

இவ் வருடத்திற்கான தேசிய வாசிப்பு மாத நிகழ்வு ” உலகை வென்றவர்கள் வாசித்த மக்களே ” என்ற தலைப்பில் இன்று செவ்வாய்க்கிழமை (01) ஆரம்பமானது.

திருகோணமலை நகராட்சி மன்ற பொது நூலகத்தில் நகராட்சி மன்றத்தின் செயலாளர் தே. ஜெயவிஷ்ணு தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை (01) காலை ஆரம்பமானது.
ஆரம்ப நிகழ்வாக தேசிய வாசிப்பு மாத விளம்பரப் பதாதை நூலகத்தின் பிரதான வாயிலில் கட்டப்பட்டது.

சிறுவர் தினத்தை முன்னிட்டு நூலகத்தினால் சிறுவர்களுக்கான சிறப்பு நிகழ்வுகள் இடம் பெற்றது நிகழ்வுகளில் செயலாளர்,  நிர்வாக உத்தியோகத்தர்,   நூலகர்,  நூலக உதவியாளர்கள் , ஊழியர்கள் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.