புதியஅரசாங்கம் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் புதிய அரசியல்அமைப்பினை உருவாக்கும் முயற்சிகள் ஆரம்பமாகும் என அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
புதிய அரசமைப்பு உருவாக்கப்பட்டதும் அதனை சர்வஜனவாக்கெடுப்பிற்காக மக்கள் முன் சமர்ப்பிப்போம் என அவர் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் இடம்பெற்றது ஜனாதிபதி தேர்தல் ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டார் புதிய அரசாங்கத்தை தெரிவு செய்வதற்காக நாடாளுமன்ற தேர்தலிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது,என தெரிவித்துள்ள அமைச்சரவை பேச்சாளர் இனப்பிரச்சினைக்கு தீர்வை பொறுத்தவரை புதிய அரசமைப்பை உருவாக்கி மக்களின் முன்னால் சர்வஜனவாக்கெடுப்பிற்காக சமர்ப்பிப்போம் என எங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தி;ல் தெளிவாக தெரிவித்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.