‘பறிக்கப்பட்ட பிரஜாவுரிமைய மீள வழங்குமாறு அனுரகுமாரவிடம் வேண்டுகோள் விடுக்கவுள்ளேன்” – ரஞ்சன் ராமநாயக்க

26 0

பறிக்கப்பட்ட தனது பிரஜாவுரிமையை ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க  மீள வழங்கவேண்டும் என ரஞ்சன்ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

எனக்கு முழு மன்னிப்பு வழங்கி எனது பிரஜாவுரிமையை மீள வழங்கவேண்டும் என  ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்கவிடம் வேண்டுகோள் விடுக்கவுள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார்.

எனது பிரஜாவுரிமையை மீள வழங்குமாறு ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுக்கவுள்ளேன்,முன்னாள் ஜனாதிபதி  எனக்கு மன்னிப்பு வழங்கினார்,எனினும் எனது வாய்பூட்டப்பட்டுள்ளது அரசியலில் ஈடுபட எனக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது,எனது பிரஜாவுரிமைகள் குறித்து புதிய ஜனாதிபதியிடம் நான் வேண்டுகோள்விடுப்பேன்,எந்த குற்றச்செயலிற்காகவும் நான் சிறைத்தண்டனையை அனுபவிக்காததால் எனக்கு எனது பிரஜாவுரிமை மீள கிடைக்கும் என நான் நம்புகின்றேன் என ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.