யேர்மனி ஒபன்பாக்(OffenBach) நகரத்தில் தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 37 ஆவது நினைவு வணக்க நிகழ்வு

113 0

யேர்மனி ஒபன்பாக்(OffenBach) நகரத்தில் தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 37 ஆவது நினைவு வணக்க நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றது. பொதுச்சுடர் ஏற்றலுடன் ஆரம்பிக்கப்பட்ட இந் நிகழ்வு தமிழீழத் தேசியக் கொடி ஏற்றப்பட்டு ஈகைச்சுடருடன் திலீபனின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டது. வருகைதந்திருந்த மக்கள் தீபம்இ ஏற்றி மலர்தூவி தியாகதீபத்திற்கு தங்கள் வணக்கத்தைத் தெரிவித்தனர்.

அதைனைத் தொடர்ந்து அகவணக்கத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின கவிதாஞ்சலி இநடனாஞ்சலி சிறப்புரை இறுதியாக தேசியக் கொடி இறக்கிவைக்கப்பட்டு நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் எனும் எழுச்சிப் பாடலுடன் நிகழ்வு நிறைவடைந்தது.