பஸ் – மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ; ஒருவர் படுகாயம்

11 0

மாத்தளை – ரைதலாவெல வீதியில் 13 ஆவது மைல்கல் அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இந்த விபத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (29) இடம்பெற்றுள்ளது.

இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்று வீதியில் பயணித்த மற்றுமொரு பஸ் ஒன்றை கடந்து முன்னோக்கிச் செல்ல முயன்ற போது அதே திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றின் பின்புறத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது, மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் படுகாயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.