பாராளுமன்ற தேர்தல் தபால் மூல வாக்களிப்பு – முக்கிய அறிவித்தலை வெளியிட்டது தேர்தல் ஆணைக்குழு

10 0

எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்கவுள்ள வாக்காளர்களின் வாக்காளர் இடாப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ள இடங்கள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவினால் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில் குறிப்பிடப்படுவதாவது,

பாராளுமன்ற தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்கவுள்ள வாக்காளர்களின் வாக்காளர் இடாப்புகள் ஒக்டோபர் மாதம் 1 ஆம் திகதியிலிருந்து காட்சிப்படுத்தப்படவுள்ளது.

அதன்படி, வாக்காளர் இடாப்புகள் காட்சிப்படுத்தப்படும் இடங்கள் பின்வருமாறு ;

1. அரச நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு , சுதந்திர சதுக்கம் கொழும்பு 07

2. தொழில் திணைக்களம், தொழில் செயலகம், நாராஹென்பிட்டி கொழும்பு 05

3. கல்வி அமைச்சு , இசுருபாய, பத்தரமுல்ல

4. பதிவாளர் நாயகம் திணைக்களம், இல . 243/3A , டென்சில் கொப்பேகடுவ மாவத்தை , பத்தரமுல்ல

5. அஞ்சல் தலைமையகம், டீ.ஆர்.விஜேவர்த்தன மாவத்தை, கொழும்பு 10

6. கடற்றொழில் மற்றும் நீரியல்வள அபிவிருத்தி அமைச்சு , மாளிகாவத்தை

7. நகர அபிவிருத்தி அதிகார சபை

தேர்தல் ஆணைக்குழுவினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள www.elections.gov.lk என்ற இணையத்தளத்தின் மூலம் மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும்.

தபால் மூலம் வாக்களிக்க விரும்புவோர் வாக்காளர் இடாப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ள இடங்களில் இருந்து விண்ணப்பங்களை இலவசமாக பொற்றுக்கொள்ள முடியும் அல்லது தேர்தல் ஆணைக்குழுவின் இணையத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்

தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஒக்டோபர் மாதம் 8 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிக்கு முன்னர் அந்தந்த மாவட்ட தேர்தல்கள் அலுவலகங்களிடம் ஒப்படைக்க வேண்டும்.