பொதுத்தேர்தல் பிரச்சார காலம் – மானியம் குறித்த அறிவிப்புகளை நடைமுறைப்படுத்துவதை நிறுத்துங்கள்

25 0

ஜனாதிபதியின் மானியம்  குறித்த அறிவிப்புகளை நடைமுறைப்படுத்துவதை நிறுத்துமாறு தேர்தல் ஆணைக்குழு  வேண்டுகோள் விடுத்துள்ளது.

நாடு தற்போது பொதுத்தேர்தல் பிரச்சார சூழலில் உள்ளதால் இந்த மானியங்கள்  குறித்த அறிவிப்புகளை நடைமுறைப்படுத்துவதை நிறுத்துமாறு குறிப்பிட்ட அமைச்சுகளிற்கு தேர்தல் ஆணைக்குழு கடிதம் எழுதியுள்ளது என அதன் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவுறுத்தல்கள் தங்களிற்கு ஏற்கனவே கிடைத்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழு அதனை அறிவித்துள்ளது என ஜனாதிபதி ஊடக பிரிவின் பணிப்பாளர் நாயகம் நஜித் இன்டிக தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க ஜனாதிபதி தேர்தல் காலத்தில் மானியங்கள் வழங்குவதை இதேகாரணத்திற்காக தேர்தல்கள் ஆணைக்குழு நிறுத்தியிருந்தது.