லெபனான் தலைநகர் மீது இஸ்ரேல் மேற்கொண்ட வான்தாக்குதலில் இலங்கையர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
40வயது இலங்கையர் ஒருவர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் அவரது உயிருக்கு ஆபத்தில்லைஎன பெய்ரூட்டில் உள்ள இலங்கை தூதரகமும் வெளிவிவகார அமைச்சும் தெரிவித்துள்ளன.
ஹெஸ்புல்லா தலைவரை இலக்குவைத்து இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலின் போதே இலங்கையை சேர்ந்த ஒருவர் காயமடைந்தார் என தெரிவித்துள்ள லெபனானிற்கான இலங்கை தூதுவர் கபிலஜெயவீர காயமடைந்தவர் பெய்ரூட்டின் ரபீக் ஹரீரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.
களுத்துறை தெற்கை சேர்ந்த முகமட் ராசீக் என்பவரே காயமடைந்துள்ளார்,அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது அவர் ஆபத்தான கட்டத்தை கடந்துவிட்டார்,நான் மருத்துவமனைக்கு சென்று அவரை பார்த்தேன்,பேசினேன்,அவருக்கான மருத்துவ சிகிச்சை குறித்து மருத்துதுவ பணியாளர்களிடம் உரையாடினேன்,அதிஸ்டவசமாக அவரது உயிருக்கு ஆபத்து எதுவுமில்லை என தூதுவர் தெரிவித்துள்ளார்.