ஹெரோயினுடன் ஒருவர் கைது

7 0

கல்கிஸ்ஸ – படோவிட பகுதியில் ஹெரோயின் போதைப்பொருடளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கல்கிஸ்ஸ பொலிஸார் முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

இதன்போது, கைதான சந்தேகநபரிடமிருந்து 6.800 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

26 வயதுடைய பயாகல பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.