ஒற்றுமையாக ஓர் அணியாக போட்டியிட முயற்சி செய்யுங்கள் – திருகோணமலை தமிழ் மக்கள் வேண்டுகோள்

29 0

எதிர்வரும் பொதுத் தேர்தலிலும் மாகாண சபைத் தேர்தலிலும் அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து ஒரே சின்னத்தின் கீழ் போட்டியிட முயற்சி செய்யுங்கள் என திருகோணமலை மாவட்ட தமிழ் மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

எமது அபிலாசைகளை வென்றெடுக்க நாம் பாடுபட வேண்டும். ஒரே இனம் ஒரே கொள்கை ஒரே சின்னம் என்ற அடிப்படையில் இணைந்து செயற்பட அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளையும் கரம் கூப்பி மிகத் தாழ்மையுடன் அழைக்கின்றோம். இந்நிகழ்வானது மிக விரைவில் இடம்பெற வேண்டும் என்றும் தமிழ் மக்களின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.