யாழில் பசுமாட்டை வெட்டியவர்கள் விளக்கமறியலில்!

31 0

யாழ்ப்பாணத்தில் கன்றுத்தாச்சி பசுமாட்டினை கொலை செய்து இறைச்சியாக்கிய குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுக்கமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 

இது தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்துக்கு சென்று விசாரணைகளில் ஈடுபட்ட பொலிஸார், மாட்டினை வெட்டிய குற்றத்தின் பேரில் மூவரை கைது செய்தனர்.

பொன்னாலை கிருஷ்ணன் கோவிலுக்குப் பின்புறமாக உள்ள புதர் ஒன்றினுள் கடந்த வெள்ளிக்கிழமை (27) ஐந்து மாத கன்றுத்தாச்சி மாட்டினை வெட்டி இறைச்சியாக்கிய பின்னர், இறைச்சி கழிவுகளை அப்பகுதிகளில் வீசிச் சென்றுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்த பின்னர், மல்லாகம் நீதவான் நீதிமன்றில் அவர்களை முற்படுத்திய வேளை அவர்களை எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.