அந்தோனியார் ஆலய பின் பகுதியில் இருந்து சடலம் மீட்பு

36 0

இலுப்பைக்கடவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிப்பியாறு அந்தோனியார் ஆலய வளாகத்தின் பின் பகுதியில் உள்ள சிற்றாலயத்திற்கு முன்பாக இளம் குடும்பஸ்தர் ஒருவர் தன் உயிரை மாய்த்துக்கொண்ட நிலையில் வியாழக்கிழமை(26) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உயிலங்குளம் முதலை குத்தி பகுதியை சேர்ந்த 45 வயதுடைய அந்தோனி தெய்வீகன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் .

பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற மன்னார் திடீர் மரண விசாரணை அதிகாரி பா.பிரபா நந்தன் சடலத்தை பார்வையிட்டு சடலத்தை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்க உத்தரவிட்டார்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இலுப்பைக்கடவை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.