மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேசத்தில் இரு வாள்களுடன் கைது செய்யப்பட்ட 25 வயது இளைஞரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் வெள்ளிக்கிழமை (27) பிணையில் விடுவித்துள்ளார்.
மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ஆரையம்பதி பிரதேசத்தில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை (26) இரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 3 அடி நீளம் கொண்ட இரு வாள்களுடன் இருவர் கைது செய்யப்பட்டு காத்தான்குடி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, கைது செய்யப்பட்ட இருவரில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஒருவரை பொலிஸார் விடுவித்துள்ள நிலையில், மற்றையவரை மட்டக்களப்பு நீதவான் முன்னிலையில் நேற்றைய தினம் ஆஜர்படுத்தியபோது நீதவான் அவரை பிணையில் விடுவித்துள்ளார்.