கொஸ்வத்தையில் வீடொன்றில் தீ விபத்து ; ஒருவர் பலி

31 0

கொஸ்வத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தும்மோதர பிரதேசத்தில் உள்ள வீடொன்றில்  நேற்று(28) அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கொஸ்வத்தை பொலிஸார் தெரிவித்தனர்.

தும்மோதர பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரது வீட்டில் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தனது அறையில் தனிமையில் இருந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், உயிரிழந்தவரது சடலம் சிலாபம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

தீ பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஸ்வத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.