தீயில் கருகி ஒருவர் உயிரிழப்பு

50 0

சிலாபம் – கொஸ்வத்த, துன்மோதர, நாத்தாண்டிய பகுதியில் ஒருவர் தீயில் கருகி உயிரிழந்துள்ளார்.

44 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு தீயில் கருகி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று (28) அதிகாலை பதிவாகியுள்ளதோடு, உயிரிழந்தவர் குறித்த வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை,

சம்பவம் தொடர்பில் கொஸ்வத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.