ஹிஸ்புல்லா தலைவரை குறிவைத்து பெய்ரூட்டில் பயங்கர தாக்குதல் நடத்திய இஸ்ரேல்

23 0

காசா மீது தாக்குதல் நடத்தி வந்த இஸ்ரேல், தற்போது வடக்குப் பகுதியில் இருந்து வெளியேறிய இஸ்ரேல் மக்களை மீண்டும் பாதுகாப்பாக அதே பகுதியில் குடியமர்த்த முடிவு செய்துள்ளது. இதனால் லெபனான் தெற்குப் பகுதியில் ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.கடந்த வாரம் ஏற்கனவே நடத்திய பயங்கர தாக்குதலில் 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இந்த நிலையில் நேற்று லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்புல்லா தலைமை அலுவலகம் மீது பயங்கர வான்தாக்குதல் நடத்தியது.இந்த தாக்குதலில் கட்டடம் கடும் சேதம் அடைந்துள்ளது.

ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் ஹஸ்ரல்லா உள்ளிட்டோரை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிகிறது.இந்த தாக்குதலில் குறைந்தது 6 பேர் பலியாகியிருக்கலாம். 91 பேர் காயம் அடைந்துள்ளனர் என லெபனான் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஐ.நா. சபையில் உரையாற்றிய நேதன்யாகு, ஹிஸ்புல்லாவிற்கு எதிரான தாக்குதல் முழுவீச்சில் தொடரும் எனக் கூறினார். அவர் பேசிய உடனே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.இந்த தாக்குதலில் ஹிஸ்புல்லாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நேரடி போர் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது