திலுத்துடன் இணைந்த திலுமுக்கு தேசிய அமைப்பாளர் பதவி!

29 0

தாயக மக்கள் கட்சியின் தேசிய அமைப்பாளராக முன்னாள் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இன்று (25) நியமிக்கப்பட்டுள்ளார்.

அதற்கான நியமனக் கடிதம், கொழும்பில் உள்ள தாயக மக்கள் கட்சி அலுவலகத்தில் கட்சியின் தலைவர் திலித் ஜயவீரவிடம் இருந்து பெற்றுக் கொள்ளப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த, தாயக மக்கள் கட்சியின் தலைவரும், தொழில்முனைவோருமான திலித் ஜயவீர,

“சகோதரர் திலும் அமுனுகம இன்று எம்முடன் எமது கட்சியின் தேசிய அமைப்பாளராக இணைந்து கொள்கிறார்.” என்றார்.