இரண்டு மாதங்களாக 18 வயது யுவதியை காணவில்லை

37 0

புத்தளம், ஆனமடுவ, மிரியாகம பிரதேசத்தைச் சேர்ந்த யுவதி ஒருவர் கடந்த இரண்டு மாதங்களாக காணாமல் போயுள்ளதாக அவரது பாட்டி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

18 வயதுடைய யுவதி ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

இந்த யுவதி கடந்த ஜூலை மாதம் 27 ஆம் திகதியிலிருந்து காணாமல் போயுள்ள நிலையில் இதுவரை எந்த தகவல்களும் கிடைக்கவில்லை  என  முறைப்பாட்டாளரான யுவதியின் பாட்டி பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.

இந்த புகைப்படத்தில் உள்ள யுவதி தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் ஆனமடுவ பொலிஸ் நிலையத்திற்கு அல்லது அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்குத் தகவல் வழங்குமாறு ஆனமடுவ பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.