ஜனாதிபதி அநுரவுக்கு கென்ய ஜனாதிபதி வாழ்த்து !

33 0

கென்யாவின் ஜனாதிபதி கலாநிதி வில்லியம் ருடோ, இலங்கையின் புதிய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிற்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்ததுள்ளதுடன் இரு நாடுகளுக்கும் இடையிலான நீடித்த இராஜதந்திர உறவுகளை வலியுறுத்தினார்.

கென்யாவின் ஜனாதிபதி கலாநிதி வில்லியம் ருடோ புதிதாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுக்கு தெரிவித்துள்ள வாழ்த்தில்,

2024 செப்டெம்பர் 21ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் வெற்றிகரமாக முடிவடைந்ததைத் தொடர்ந்து, இலங்கையின் புதிதாக தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிற்கு கென்ய ஜனாதிபதி கலாநிதி வில்லியம் ருட்டோ தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். நாட்டை முன்னோக்கி வழிநடத்தும் அவரது தலைமையின் மீது இலங்கை மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.

பரஸ்பர மரியாதை மற்றும் நம்பிக்கையில் வேரூன்றிய கென்யாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவுகளையும் கென்ய ஜனாதிபதி வலியுறுத்தினார்.

இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கும், முக்கிய ஒத்துழைப்பு முன்னுரிமைகளை முன்னெடுப்பதற்கும், தெற்கு-தெற்கு ஒத்துழைப்பை வளர்ப்பதற்கும், கென்ய அரசாங்கத்துடன் இணைந்து, இலங்கையுடன் நெருக்கமாக பணியாற்றுவதற்கு அவர் தனது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தினார்.

வர்த்தகம், முதலீடு, காலநிலை மாற்றம் மற்றும் நிலையான வளர்ச்சிக்கான மலிவு நிதிக்கான அணுகல் போன்ற துறைகளில் கூட்டு முயற்சிகளின் முக்கியத்துவத்தை ஜனாதிபதி ரூட்டோ அடிக்கோடிட்டுக் காட்டினார்.

முடிவில், ஜனாதிபதி ருடோ, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் இலங்கை மக்களுக்கும் நல்ல ஆரோக்கியம் மற்றும் செழிப்புடன் வாழ வாழ்த்தினார்.