நெதர்லாந்தில் சிறப்பாக நடைபெற்ற மாபெரும் தமிழர் கண்காட்சி .

190 0

நெதர்லாந்தில் நடைபெற்ற பெரும் கண்காட்சியில் பல நூற்றுக்கணக்கான எம் உறவுகளுடன் வேற்று இனத்தவர்களும் பங்குபற்றி எமது இனம் சார்ந்த விடயங்களை அறிந்து கொண்டனர். இங்கு தமிழர் வரலாறு, பாரம்பரியம், கலாச்சாரம், தமிழீழ வளங்கள், என்பவற்றுடன் நடைபெற்று முடிந்த தொடர்ந்தும் நடைபெற்றுக்கொண்டிருக்கும் தமிழின அழிப்பு பற்றியும் தமிழர்களால் சிறிலங்கா அரசுடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைகள் மற்றும் தமிழீழ நடைமுறை அரசின் இயங்குநிலை பற்றியும் இக்கண்காட்சியில் வெளிப்படுத்தப்பட்டது. இந்நிகழ்வினை தமிழ் இளையோர் அமைப்பினரும், திருவள்ளுவர் தமிழ்க்கல்விக்கலைக் கழகமும், பொதுமக்களும், கிளைச்செயற்பாட்டாளர்களும் இணைந்து நடத்தியுள்ளார்கள். இக் கண்காட்சியைக் காண வந்த மக்கள் மனத்திருப்தியுடன் வாழ்த்துக்களையும் தெரிவித்துச் சென்றனர்.