தேசிய நெருக்கடியின் போது ஜனாதிபதியுடன் இருந்தமையை பெருமையாகக் கருதுகின்றோம் – ரணில் ஆதரவு தரப்பு

10 0

தேசிய நெருக்கடியின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து பணியாற்றியமையைப் பெருமையாகக் கருதுவதாகவும், தேர்தலில் வெற்றி பெற்றுள்ள அநுரகுமார திஸாநாயக்கவுக்கு எதிர்காலத்தை சிறந்த முறையில் கொண்டு செல்ல வாழ்த்துவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளித்த முக்கிய தரப்பினர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய மனுஷ நாணயக்கார தனது எக்ஸ் தள பதிவில், தேசிய நெருக்கடியின் போது ரணில் விக்கிரமசிங்கவின் குழுவில் இருந்ததில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. மக்கள் கொடுத்த அதிகாரத்தை அவரின் வழிகாட்டுதலின் கீழ் பயன்படுத்தினேன். எந்த விடயமாக இருந்தாலும், நாங்கள் தொடங்கியதை முடிக்க உறுதிபூண்டுள்ளோம். ரணிலுக்கு எனது வாழ்த்துக்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.

சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவீன் திஸாநாயக்க தனது பதிவில், இலங்கையின் 9ஆவது நிறைவேற்றனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டமைக்காக  அனுரகுமார திஸாநாயக்கவை பாராட்டுகிறேன். இலங்கை மக்கள் பேசுகின்றனர். மற்றும் ஜனநாயகம் வென்றுள்ளது. நமது நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு வருங்கால ஜனாதிபதிக்கு பலமும், விவேகமும், தைரியமும் கிடைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன். சப்ரகமுவ மாகாண ஆளுநர் பதவியை நான் விரைவில் ராஜினாமா செய்வேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தனது பதிவில், அநுரகுமார திசாநாயக்கவுக்கு வாழ்த்துக்கள். இலங்கை அரசியல் வரலாற்றில் இல்லாத ஒரு சமூக புரட்சியை அநுர உருவாக்கியுள்ளார். அவருடைய கொள்கைகளுடன் நாம் முரண்பட்டவர்களாக இருக்கிறோம், அவர் நாட்டுக்காக ஒரு சிறந்த சேவையைச் செய்வார் என்று நம்புவோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.