8 ஆண்டுகளுக்கு பிறகு தென்பட்ட பனிக்கரடி.. சுட்டு கொன்ற போலீஸ் – ஏன் தெரியுமா?

30 0

ஐஸ்லாந்து நாட்டில் 8 வருடங்களுக்கு பிறகு தென்பட்ட பனிக்கரடியை போலீசார் சுட்டு கொன்றனர்.பனிக்கரடியால் உள்ளூர் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற காரணத்தினால் சுட்டு கொன்றோம் என்று இதற்கு போலீசார் விளக்கம் அளித்தனர்.

பனிக்கரடிகள் இஸ்லாந்தை பூர்வீகமாக கொண்டவை அல்ல. ஆர்டிக் பனிப்பிரதேசத்தில் தான் அதிகளாவிலான பனிக்கரடிகள் வாழ்கின்றன.

கிரீன்லாந்தில் இருந்து உருகும் பனிக்கட்டிகள் வழியே பனிக்கரடிகள் ஐஸ்லாந்திற்கு வருகினறன.கடையாக 2016 ஆம் ஆண்டு தான் ஐஸ்லாந்தில் பனிக்கரடி காணப்பட்டது. 9 ஆம் நூற்றாண்டில் இருந்து இப்போது வரை ஐஸ்லாந்தில் 600 பனிக்கரடிகள் காணப்பட்டதாக சொல்லப்படுகிறது .