குரம் ஸேக்கின் உடலில் 45 காயங்கள்

239 0

இலங்கையில் கொல்லப்பட்ட குரம் ஸேக்கின் உடலில் 45 காயங்கள் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச ஊடகமொன்று இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

பிரிட்டனைச் சேர்ந்தவரான குரம் ஸேக் இலங்கையில் கடந்த 2011 ஆம் ஆண்டு நத்தார் தினத்தன்று விருந்தகம் ஒன்றில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த சம்பவத்தின் போது இவரது தோழி பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டார்.

குறித்த சம்பவம் தொடர்பான தகவலொன்றை சர்வதேச ஊடகமொன்று தற்போது வெளியிட்டுள்ளது.

இதேவேளை, இந்த சம்பவத்துடன் தொடர்புடைய, உள்ளுர் அரசியல்வாதி ஒருவர் மற்றும் மேலும் மூவருக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.