2024 ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்கள் சம எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெற்றுக்கொண்டால் திருவுளச் சீட்டு முறையின் மூலம் வெற்றியாளர் தீர்மானிக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எந்தவொரு வேட்பாளரும் 50 வீத வாக்குகளைப் பெற்றுக்கொள்ளத் தவறினால், இரண்டாம் சுற்று வாக்கு எண்ணும் பணிகள் மேற்கொள்ளப்படும்.
அதனடிப்படையில் இரண்டாம் சுற்று வாக்கு எண்ணப்படும்போதும் ஒன்றுக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் குறிப்பாக இரண்டாம், மூன்றாம் இடத்தைப் பெற்றுக்கொண்ட வேட்பாளர்கள் ஒரே எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெற்றுக்கொண்டிருந்தால் திருவுளச்சீட்டு முறையின் அடிப்படையில் ஜனாதிபதி தெரிவு மேற்கொள்ளப்படவுள்ளது.
ஒட்டுமொத்தமாக, வாக்குகள் எண்ணும் நடவடிக்கைகள் முடிவடைந்த பிறகும் முதல் இரண்டு வேட்பாளர்கள் சமமான வாக்குகளை பெற்றுக்கொண்டால் அப்போதும் திருவுளச்சீட்டு முறைமை பின்பற்றப்படும் என கூறப்பட்டுள்ளது.