நாட்டிலுள்ள சகல நிர்வாக மாவட்டங்களிலும் பொது ஒழுங்கமைதியைப் பேணுவது அவசியமாகவுள்ளது எனக் கருதுவதால் பொது மக்கள் பாதுகாப்பு கட்டளை சட்டத்தின் கீழ் ஊரடங்கு சட்டத்தை நடைமுறைப்படுத்துவதாகக் குறிப்பிட்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
சகல நிர்வாக மாவட்டங்களிலும் பொது ஒழுங்கமைதியைப் பேணுவது அவசியமாகவுள்ளதென நான் கருதுகின்றேன். அதனால் பொது மக்கள் பாதுகாப்பு கட்டளை சட்டத்தின் 16ஆம் பிரிவின் கீழ் எனக்கு உரித்தாக்கப்பட்டுள்ள தத்துவங்களுக்கமைய ஊரடங்கு சட்டத்தைப் பிறப்பிக்கின்றேன் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கமைய இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பாதுகாப்பு செயலாளரினால், பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரினால் அல்லது இவர்களால் அதிகாரமளிக்கப்பட்ட எவரேனும் அலுவலரினால் வழங்கப்பட்ட எழுத்திலான அனுமதிப்பத்திரமொன்றின் அதிகாரத்தின் கீழன்றி பொது இடங்களில் நடமாட முடியாது என குறித்த வர்த்தமானி அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.