இந்திய கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் டோனி தொடர்பான வழக்கினை இந்திய உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
இந்து கடவுளான விஷ்ணுவைப் போன்று வேடமிட்டு, ஒரு கையில் பாதணியை வைத்திருப்பது போன்ற விளம்பரப் படம் ஒன்றில் தோன்றியமைக்காக இந்த வழக்கு தொரப்பட்டது.
நீண்டகாலமாக வௌ;வேறு நீதிமன்றங்களில் விசாரணையில் இருந்த வழக்கு இறுதியாக ஆந்திராவின் அனந்த்பூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதனைஎதிர்த்து டோனியின் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதற்கு முன்னரும் டோனிக்கு எதிராக டெல்லி மற்றும் கர்நாடகா நீதிமன்றங்களில் தொடரப்பட்ட வழக்குகளையும் உயர் நீதிமன்றம் ரத்து செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.