உளர்த்தப்பட்ட கடல் ஆமை இறைச்சியுடன் ஆறு பேரை கடற்பாதுகாப்பு படையினர் கைதுசெய்துள்ளனர்.
இதன்போது அவர்களிடமிருந்து சுமார் 13.2 கிலோ உளர்த்தப்பட்ட ஆமை இறைச்சி மீட்கப்பட்டுள்ளது.
திருகோணமலை கடற்பரப்பில் கடற்தொழில் படகு ஒன்றில் இருந்து இந்த உளர்த்தப்பட்ட ஆமை இறைச்சி கைப்பற்றப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்டவர்கள் திருகோணமலை கடற்தொழில் திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் அவர்களிடமிருந்த மீட்கப்பட்ட ஆமை இறைச்சி உட்பட்ட பொருட்களும் திணைக்கள அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
வன விலங்குகள் மற்றும் அருகிவரும் உயிரினங்கள் தொடர்பான சர்வதேச சாசனத்தின்படி கடல் ஆமைகளை பிடிப்பது மற்றும் உணவிற்காக பயன்படுத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும்.
1979 ஆம் ஆண்டு முதல் இந்த சட்டம் இலங்கையில் அமுலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.