நிர்வாணமாக நடந்த செக் குடிமகன்

373 0

201607271109454267_Drinker-Leaves-Clothes-In-Pub-walks-nude-on-street_SECVPFஐரோப்பாவில் உள்ள செக் குடியரசு நாட்டில் மது குடித்த பில்லுக்கு கொடுக்க பணம் இல்லாததால் தனது ஆடைகளை எல்லாம் பார் பணியாளரிடம் அடமானம் வைத்துவிட்டு முழு நிர்வாணமாக ஒரு ‘குடிமகன்’ நடந்து செல்லும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

ஐரோப்பாவில் உள்ள செக் குடியரசு நாட்டில் மது குடித்த பில்லுக்கு கொடுக்க பணம் இல்லாததால் தனது ஆடைகளை எல்லாம் பார் பணியாளரிடம் அடமானம் வைத்துவிட்டு முழு நிர்வாணமாக ஒரு ‘குடிமகன்’ நடந்து செல்லும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

செக் குடியரசில் உள்ள பிரெரோவ் நகரில் வசித்துவரும் ஒருவர் கடந்த திங்கட்கிழமை அங்குள்ள ஒரு மது பாருக்கு சென்றுள்ளார். தேவையான அளவுக்கு மது வகைகளை வாங்கி குடித்த அவர், பின்னர் தனது கையில் பணம் இல்லாமல் இருப்பதை அறிந்து திடுக்கிட்டார்.

குடித்ததற்கான பில்லை கொண்டு வந்த சர்வரிடம் விபரத்தை கூறியபோது, ‘ஒன்னு பணத்தை எண்ணி வை.., இல்லாட்டி துணி,மணிகளை கழற்றி வைத்துவிட்டு வெளியே போ. பணத்தை கொண்டுவந்து தந்துவிட்டு துணி,மணிகளை வாங்கிக்கோ..,’ என சர்வர் கராறாக கூறி விட்டார்.

இதை கவுரவப் பிரச்சனையாக கருதிய அந்த ‘குடிமகன்’ தான் அணிந்திருந்த உடைகள் அத்தனையையும் கழற்றி பாரில் வைத்து விட்டு தனது செல்போனில் யாரிடமோ பேசியபடி வெறும் ‘சாக்ஸ்’ அணிந்த கால்களுடன் சாலையில் இறங்கி நடக்க ஆரம்பித்தார்.

அந்த சாலை வழியாக சென்ற வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் இந்த காட்சியை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். சிலர் இதுபற்றி போலீசுக்கு புகார் அளித்தனர். இதைப்பற்றி எல்லாம் கவலையேப்படாமல் வெற்றுடம்புடன் சாவகாசமாக நடந்து சென்ற அந்த நபர், அருகாமையில் உள்ள மற்றொரு பாரில் மது அருந்தி கொண்டிருந்த தனது நண்பரை சந்தித்து, அவரிடம் இருந்து கடனாக பணம் வாங்கிவந்து, தனது உடைகளை அடமானம் வைத்திருந்த பாருக்கு செலுத்தினார்.

பின்னர், அரை மனிதனாக இருந்த அவர் ஆடை அணிந்த முழு மனிதனாக அந்த பாரில் இருந்து வீட்டுக்கு சென்றுள்ளார். இந்த காட்சிகள் எல்லாம் அந்த பாரின் அருகாமையில் உள்ள சாலையில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் தொடர்ச்சியாக பதிவாகியுள்ளது. அந்த காட்சி்களுடன் மேற்படி தகவல் வெளிநாட்டு ஊடகங்களில் தற்போது செய்தியாக வலம் வந்து கொண்டிருக்கின்றன.