மக்களால் தெரிவு செய்யப்படுபவருக்கு ரணில்விக்கிரமசிங்க வழிவிடுவார் என எதிர்பார்க்கின்றேன் – அனுரகுமார

47 0

அமைதியான முறையில் அதிகார மாற்றம் குறித்து தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமாரதிசநாயக்க  எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் பொதுமக்கள் அமைதியை பேணவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜனநாயக ரீதியில் மக்களால் அவரின் பின்னர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுபவருக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வழிவிடுவார் என  எதிர்பார்க்கின்றேன் என அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.

அதிகாரமாற்றத்தின் போது ஜனாதிபதி எந்த பிரச்சினையையும் உருவாக்குவார் என எதிர்பார்க்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.