இலங்கை பிரதமரின் இந்திய விஜயத்தில் பல முக்கிய கலந்துரையாடல்கள்

318 0

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் இந்திய விஜயத்தின் போது, முக்கிய பல கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 25ஆம் திகதி இந்தியா செல்லும் அவர், 29ஆம் திகதி வரையில் அங்கு தங்கி இருப்பார்.

தனிப்பட்ட விடயமாக இந்தியா செல்லும் பிரதமர், 26ஆம் திகதி டெல்லியில் உத்தியோகபூர்வு சந்திப்புகளை நடத்தவுள்ளார்.

26ஆம் திகதி பிரதமர் நரேந்திரமோடியை சந்திக்கும், பிரதமர் ரணில், பின்னர் வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ், உள்துறை அமைச்சர் ராஜ்ராத்சிங், போக்குவரத்து அமைச்சர் நிட்டின் கட்காரி ஆகியோரையும் சந்திக்கவுள்ளார்.

இந்த சந்திப்புகளின் போது திருகோணமலை துறைமுக அபிவிருத்தி, எரிவாயு மின்னுற்பத்தி நிலையத்தை அமைக்கும் வேலைத்திட்டம், வீதி அபிவிருத்தி உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும், மீனவர் பிரச்சினை தொடர்பிலும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

மேலும் இலங்கை – இந்திய பொருளாதார, தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கையான எட்கா குறித்தும் பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.