கலபிட்டமட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள வாக்கெடுப்பு நிலையம் ஒன்றுக்கு அருகில் சட்டவிரோதமாக ஜனாதிபதி வேட்பாளர் ஒருவருக்கு சார்பான வேட்பாளர் கையேடுகளை பகிர்ந்த சந்தேக நபரொருவர் இன்று (21) கைது செய்யப்பட்டுள்ளதாக கலபிட்டமட பொலிஸார் தெரிவித்தனர்.
இம்புல்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் அந்த வாக்கெடுப்பு நிலையத்துக்கு சுமார் 500 மீட்டர் தொலைவில் பொதுமக்களுக்கு வேட்பாளர் கையேடுகளைப் பகிர்ந்துள்ளார்.
இதனையடுத்து, பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை பிணையில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் கலபிட்டமட பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.